RAJATHEE SURESHOT CALLS

RAJATHEE SURESHOT CALLS
OPERATOR CALLS STOCK FUT - CASH TRADING CALLS - DAILY 3 CALLS (ALL OPEN IN ONE TIME) PAID TRAIL RS.5,000 WE GIVE DAILY SWING Trading Calls In Fut-Cash Calls Service_ INTRA DAY 2 TO 3 CALLS ALL OPEN IN ONE TIME ALL FOLLOW UP. ENTRY, EXIT, PROFIT BOOKING SL HIT ALL INFORM FROM OUR HIGH SPEED SMS SERVERS To your mobile sms inbox with in 30seconds TO JOIN CALL.ME, 09952772333

Thursday, January 29, 2015

நாம் கேப் அப்பினால், எப்படிபட்ட தொடர் நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்த்தோம். இதுவரைக்கும் நாம் பார்த்த கேப் அப் மற்றும் கேப் டவுனை நான் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன். பின்பு எந்த மாதிரியான, இதுவரை நாம் பார்க்காத கேப் அப் டவுன் வழிமுறைகளையும் பார்க்கலாம்.



நாம் கேப் அப்பினால், எப்படிபட்ட தொடர் நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்த்தோம்.

இதுவரைக்கும் நாம் பார்த்த கேப் அப் மற்றும் கேப் டவுனை நான் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன். பின்பு எந்த மாதிரியான, இதுவரை நாம் பார்க்காத கேப் அப் டவுன் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

முதலில் கேப் டவுன் பற்றி:

நான், கேப் டவுனை படிக்கும்போது இரண்டு வகையான நகர்வுகளை விளக்கி சொன்னேன்.

கேப் டவுன் முறையில் சந்தை இறங்கிய பிறகு, மேல்நோக்கி திரும்புதல்.

படம் 1          



கேப் டவுன் முறையில் சந்தை இறங்கிய பிறகு தொடர்ந்து இறங்குதல்.

படம் 2

 

கேப் அப் முறையில் சந்தை மேல்நோக்கி துவங்கிய பிறகு, கீழ்நோக்கி திரும்புதல்.

படம் 3


 

 

கேப் அப் முறையில் சந்தை மேல்நோக்கி துவங்கிய பிறகு தொடர்ந்து மேல்நோக்கி செல்லுதல்.

படம் 4

 

தற்போதைய சந்தையானது, பல்வேறு முறையில் துவங்கி, பல்வேறு முறையில் நகர்வதால், நமக்கு குழப்பம் அதிகமாகிறது. நான் மேலே சொன்ன நான்கு முறைகளை தவிர்த்து வேறு எந்த முறைகளில் எல்லாம் நகர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். இதனால், மற்றமுறை நகர்வுகளையும் நாம் அறிந்து இருப்பதன் மூலம், அந்த மாதிரி நகர்வுகள் வரும்போதெல்லாம், நாம் சந்தையில் வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும்.

அந்த வகையில் சில நகர்வுகளை இப்போது பார்க்கலாம்.

முதலில் கேப் டவுன் முறையில் சந்தை துவங்கினால், ஏற்கெனவே நாம் பார்த்த நகர்வுகளை தாண்டி, வேறு எவ்வாறு நகரலாம் என்று பார்ப்போம்.

 படம் 5:

 மேலே உள்ள படத்தில் தங்கம் 14.01.2015. என்று கேப்டவுன் முறையில் இறங்கி துவங்கி உள்ளது.பின்பு நாம் ஏற்கெனவே படித்ததுபோல், முதல் ஒரு மணிநேரத்தின் லோவை உடைத்து கீழே இறங்கி நாம் விற்று வாங்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதன்பின் நல்ல பாட்டத்தை உருவாக்கி மேலே திரும்புகிறது. இவ்வாறு திரும்பி, மீண்டும் அந்த நாளில் எங்கு ஆரம்பித்ததோ, அந்த ஆரம்ப புள்ளியை நோக்கி மேலே திரும்பி நகர்கிறது. அந்நாளின் முடிவில், நாளின் ஆரம்பவிலையின் அருகாமையில் தடுக்கப்பட்டு, பின் அந்த விலையிலேயே முடிகிறது.இது ஒரு வகையான நகர்வு.

படம் 6:

 மேலே உள்ள வரைபடத்தில் தங்கத்தின் தொடர் நிகழ்வை காணலாம். முதலில் தங்கம் 14.01.2015அன்று (படம் 5) எவ்வாறு இறங்கி துவங்கி பின்பு, துவங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது என்று பார்த்தோம்.

தற்போது நாம் மேலே பார்க்கும் படம் 6, தங்கம் 15.01.2015. அன்று எவ்வாறு நக்ர்ந்துள்ளது என்பதை காட்டக்கூடிய படம் ஆகும்.

இந்த படத்தில், படம் 4 நாளில் விளக்கிய அத்தனை நிகழ்வுகள் நடந்த பின்பு, அதன் தொடர்ச்சியாக,முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைத்து மேலே ஏறுகிறது. அதாவது, காலையில் கேப் டவுனில் துவங்கிய உடன் ஏறாமல் ஒரு கணிசமான இறக்கத்தை கொடுத்த பிறகு, மேலே திரும்பியதோடுமட்டும் அல்லாமல், முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைக்கும்போது, மிக வலிமையாக ஏறி, மீண்டு ஒரு மிகப்பெரிய உச்சத்தை தோற்றுவிப்பதை இதில் காணலாம்.

இதில் இன்னும் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில், விலையானது, கேப்டவுனில் துவங்கி, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தாண்டி ஏறிவதோடு மட்டும் அல்லாமல், அடுத்து முந்தைய நாளின் முடிவுவிலையையும் தாண்டி ஏற ஆர்ம்பிகிறது. இப்படி இரண்டு தடைநிலைகளை தாண்டி ஏறும்போது, அது மிகபலமாக ஏறலாம் என்பதற்க்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

 படம் 7

கேப்டவுனில் இன்னும் எந்தமாதிர் நகரலாம் என்பதை இப்போது படம் 7 மூலம் பார்க்கலாம்.

படம் 7ல், நாம் பார்ப்பது, சில்வர் 07.01.2015. நகர்ந்த நகர்வை எடுத்துக்காட்டாக வைத்து பார்க்கிறோம்.

இதில் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்களை ஒட்டியே ஆரம்பிக்கிறது. அதாவது, ஒரு கேப் டவுன் ஓபன், அடுத்து, முதல் ஒரு மணிநேரத்தின் லோவை உடைத்து விலை இறங்குகிறது. பின்பு இறக்கம் தொடர்கிறது. இப்போது நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இறக்கம், எங்கே சப்போட் எடுத்து மேல்நோக்கி திரும்புகிறது என்பதே. இந்த வரைபடத்தை கவனித்து பார்த்தால், முந்தையநாளின் லோவிற்க்கு அருகாமையில், இந்த இறக்கம் முடிவுக்கு வந்து பின்,மேலே திரும்ப ஆரம்பிக்கிறது. அப்படி திரும்பிய விலையானது, பின் வலிமையாக ஏறி ஆரம்பிக்கிறது. இந்த ஏற்றம் தொடர்ந்து முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தொடுகிறது. பின்பு அதையும் தாண்டி கொஞ்சம் ஏறுகிறது.

இந்த வரைபடத்தின் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னெவென்றால், சந்தை கேப்டவுனில் இறங்கி துவங்கிய பிறகு, தொடர்ந்து இறங்கினாலும், நாம் இந்த இறக்கம் எங்கே முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, அந்த திருப்ப்த்தில், நாம் வாங்கி விற்கும் நபராக திட்டமிடலாம்.

 படம் 8

படம் 8ல் தங்கம் 30.12.14ல் உள்ள நகர்வை எடுத்துகாட்டாக பார்கிறோம்.

இந்த படத்தில் தங்கம் ஒர கேப் அப்பில் துவங்கி, பின் ஒரு மணிநேர கேன்டிலின் உச்சத்தில் தடுக்கப்பட்டு கீழே இறங்குகிறது. இந்த இறக்கத்தில், ஒரு மணிநேர கேன்டிலின் குறைந்தபட்சவிலையை உடைத்து இறங்குகிறது. பொதுவாக நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஒரு மணிநேர கேன்டிலின் லோவை உடைத்து இறங்கினால், வலிமையாக இறங்க வாய்ப்புள்ளது என்று முன்னமே படித்துள்ளோம். அந்த வகையில், வியாபாரிகள் விற்றுவாங்கலாம். ஆனால், நாம் இங்கே புதிதாக படிப்பது என்னவென்றால், தொடரந்து இறங்கிய தங்கம், நன்கு இறங்கிய பிறகு,முந்தையநாளின் முடிவு விலைக்கு அருகில் ஒரு ஆதரவை எடுத்து மேலே வலிமையாக ஏற ஆரம்பிக்கிறது.

ஆம், இந்த இடம்தான், நாம் வாங்கிவிற்பதற்க்கு சரியான இடம் ஆகும். மேலும் இது மிகவும் ரிஸ்க் குறைவான இடமாகவும் பார்க்கலாம்.


படம் 9


படம் 9ல் தங்கம் 12.01.15. எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.

நாம் இப்போது, கேப் அப்பில் வரக்கூடிய வித்தியாசமான நகர்வுகளை பார்க்க இருக்கிறோம். இந்த படத்தில் தங்கம் ஒரு கேப் அப்பில் துவங்கி, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தையும் தாண்டி ஏறி உள்ளது. அடுத்த ஒருமணிநேரத்தின் கேன்டிலும், ஏறுமுகமாகவே உள்ளது. ஆனால், அடுத்து தோன்றிய ஸ்பின்னிங் டாப் ஏற்றத்தை முடிவுக்கொண்டுவருவதாக நமக்கு தெரிவிக்கிறது. பின்பு இறங்கம் தொடர்கிறது.

இப்போது நமக்கு குழப்பம்.

கேப் அப்பில் துவங்கிய தங்கம் ஏறவும் செய்தது. ஒரு சிறிய லாபத்தையும் கொடுத்தது. ஆனால் நான் அதை தவறவிட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களுக்கான் ஒரு வாய்ப்பை பற்றிதான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

கேப் அப்பில் ஏறிய தங்கம், ஒரு குறிப்பிட்ட அளவு ஏறியபிறகு இறங்க ஆர்மபித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்து, கேப் அப் முறையில் துவங்கிய தங்கத்தின், ஆரம்பவிலையை நோக்கி நகர்கிறது.இந்த இறக்கம், அந்த நாளின் ஆரம்பவிலையின் அருகே தடுத்து நிறுத்தப்படுகிறது. இப்போது,ஆரம்பவிலை என்பது முக்கிய ஆரவுநிலையாக மாறுகிறது. தங்கமானது, இந்த ஆரம்ப விலையின் அருகாமையில் தடுத்து நிறுத்தப்பட்டு மேல்நோக்கி திரும்பி ஏற ஆரம்பிக்கிறது.

இந்த ஏற்றத்தைதான், முன்னால், தவறவிட்டவர்களும், ஏற்கெனவே வாங்கி லாபத்தை எடுத்தவர்களும், வாங்குவதற்க்கு அடுத்த வாய்ப்பு ஆகும். தங்கம், இங்கே தடுக்கப்பட்டு மேல்நோக்கி திரும்பிய பிறகு, வலிமையாக ஏறுகிறது. இந்த ஏற்றம் முந்தைய உச்சத்தையும் தாண்டி பெரிய லாபத்தை கொடுக்கிறது.

 இன்னும் பல வித்தைகளை தொடர்ந்து கற்கலாம்.